Saturday, December 17, 2011

சிவப்பு விளக்கு (சிறுகதை )

அவசரம் அவசரமாக கதவை திறந்தான் .அறையில் யாரும் இல்லை .நேரத்தோடை சுரேஸ்க்கு சொல்லியிருந்தும் இன்றும் அலட்சியபடுத்தியது என்னவோ போல் இருந்தது அவனுக்கு ,வழமையாக எங்கும் போகாமல் இதுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் சுரேஸின் மைத்துனனை கூட காண கிடைக்கவில்லை . .இன்றைக்கென்று எங்கு போய் தொலைஞ்சாங்கள் சனியன்கள் என்று மனதுக்குள் திட்டிக் கொண்டான். இந்த எட்டாவது மாடிக்கு ஏறி வந்த மூச்சு அடங்காத நிலையில் அதே வேகத்திலையே கதவை சாத்தி விட்டு இறங்கி கொண்டிருந்தான். ,படி இறங்கின்ற இடத்தில் எந்த நேரம் சென்றாலும் அழுக்கு உடை அணிந்த கறுத்த இனத்தவன் ஒருவன் குந்தி இருப்பது வழக்கம் .அவனையும் சிறிது இடித்து தள்ளிக் கொண்டு வேகமாக போக , அவன் முதலில் டச்சு மொழியில் ஏதோ இவனை நோக்கி சத்தம் போட்டான் ,பிறகு தனக்கு தெரிந்த ஆங்கிலமாக வந்த எதையோ சத்தம் போட,,எந்த மொழியும் கேட்காத மாதிரி சென்று கொண்டிருந்தான்

அந்த நாட்டு தலை நகரத்தின் இருக்கும் பல அடுக்கு மாடி குடியிருப்புகளுக்குள் இவன் தங்கி இப்பொழுது வசித்து வரும் மாடி குடியிருப்பு பகுதியின் பெயரை சொன்னாலே பலர் பயந்து நடுங்குவார்கள். .,சிலர் அங்கு வாழ்பவர்களை எதுக்கும் பயப்படாத வீர்ர்கள் சூரர்கள் பயங்கர வாதிகள் என்றும் நினைப்பது உண்டு.இவனும் சுரேஸும் அவனது மைத்துனனும் அப்படியானவர்கள் அல்லர். அவர்கள் அண்மையில் அந்த நாட்டுக்கு வந்த அகதிகள் .அகதி தொண்டு நிறுவனம் ஒன்று அவர்களுக்கு இந்த விபரங்கள் பற்றி சொல்லி கொள்ளமாலே குடியமர்த்தியது.விபரம் தெரிந்தது அண்மையில் தான். .வேறிடத்துக்கு மாறுவதற்க்கான் முயற்சி ஒன்றுக்கு தான் இன்று இவர்களை இந் நேரத்தில் ஆயத்தமாக நிற்க சொல்லி விட்டு கீழை வந்து மேலை வருவதுக்குள் எங்கையோ மாறி விட்டுதுகள். .

எங்கை போறது உதுகளுக்கு .வேலை செய்யவும் அனுமதி இல்லை ,உந்த கடைத் தெரு வழிய வாய் பார்த்து கொண்டும் அங்கே தூரத்தில் தெரியும் சிவப்பு விளக்கு பகுதி தெருக்களில் சுற்றி திரிந்து வேடிக்கை பார்க்க போயிருக்குங்கள் ..நல்ல ஒரு சனத்தோடை றூம் மேற்றாய் கூட்டு சேர வேண்டிய தலை விதியை நினைத்து தலையில் அடித்து கொண்டான் , இந்த கொஞ்சம் நாட்களுக்குள் உவன்களின் கதைகளை கேட்டு கேட்டே  அவன் அரை பைத்தியமாய் போயிட்டான் வேறை

அவன் முதல் முதலாக அந்த அறையினுள் வந்த பொழுது அங்குள்ள நாலு கட்டில்களில் ஒன்றுக்கு மேல் ஒன்றாக இருக்கும் அவற்றில் இரண்டு வெறுமையாக இருந்தது ,இரண்டில் ஒன்று தான் அவனுக்காக காத்திருந்தது. ஏற்கனவே அங்கு தங்கியிருந்த சுரேஸ் தான் பேச தொடங்கினான், பழக தொடங்கினான்,,அதிகாரம் காட்ட தொடங்கினான், .தான் முந்தி வந்தவன் என்ற திமிர் என்றதோடல்லாமால் கனக்க தெரிந்தவன் போல காட்டி கொண்டான்..மற்றவன் அவன் கேட்டதுக்கு பதிலும் சொல்லமாட்டான் .சிலவேளை எல்லாத்துக்கும் ஓம் அல்லது தெரியாது .. சிலவேளை குப்புறமாக படுத்த கொண்டு பெட்சீட்டுக்குள் தான் எந்நேரமும் ஜீவனம் நடத்திக்கொண்டிருந்தான் .சில நேரம் தன்னிலை மறந்து கலந்த தலையுடன் எதையோ உற்றும் பார்த்து வெறித்த படி இருப்பான். .ஏற்கனவே பயங்கரமாக இருக்கும் அபார்ட்மென்டின் மூலையில் உள்ள அறையில் அவனது ஒவ்வொரு அசைவும் நடவடிக்கையும் பயங்கரத்தை கூட்டுவது மாதிரியே இருக்கும். யாரேனும் பார்ப்பவருக்கு .ஏன் அவனுக்கே அப்படித்தான் இருந்தது. .இன்று வரை அவனுடன் ஒரு வார்த்தை கதைத்து பேசி கொண்டாடவில்லை என்றாலே பாருங்கள். .அவன் பேசாக்குறைக்கு  எல்லாத்தையும் சேர்த்து .சுரேஸ் பொரிஞ்சு தள்ளுவான் ..அவனுடைய அண்ட புளுகு ஆகாச புழுகு எல்லாத்தையும் கேட்டே தீர வேண்டிய நிர்பந்தம் இருந்தது வந்த புதிதில். அது அவனுக்கு செய்யும் ராகிங் போல் எடுத்து கொள்ள வேண்டி இருந்தது.

உவன் சுரேஸை இப்ப நல்லாய் தெரிந்தா பிறகு கூட அன்று ஒரு நாள் அவனுடன் அப்படி விடாப்பிடியாக வாதிட்ட தன்னுடைய முட்டாள்தனத்தை உணர்ந்து பின்னும் இப்பவும் அவனுடைய கதைக்கு கதை பதில் சொல்லிக்கொண்டிருக்கிறான்..சுரேஸை பற்றி அவனுக்கு இப்ப நல்லாய் தெரிந்தாலும் சுரேஸை தெரியாத ஆட்களுக்கு அவனை பற்றி கட்டாயம் சொல்லியே ஆக வேண்டும்.

சுரேஸ் அவனது மைத்துனன் மாதிரி பெண் சகோதர பொறுப்போ தாய் தகப்பன் ஊரிலை வறுமை கோட்டு கீழ் கஸ்டப்படுற மாதிரி ஒன்றும் இல்லை ,மைத்துனனுக்கு ராஜா என்று ஏதோ பெயர் ..அது கூட ஒருதருக்கும் தெரியாது .சுரேஸ் அதிகாலையிலே டிப் டொப்பாக வெளிக்கிட்டு செல்வான் .விஸ்தரிப்பானேன் அவளுக்கு காதலி இருந்தாள் ஒரு தமிழ் பெட்டை ..தன்னுடைய உடைந்த தத்துவங்கள் எல்லாவற்றையும் ஏற்றி அவனுடைய காதலுடன் அவளிடம் திணித்திருந்தான் .உவருக்கு உந்த தமிழ் பண்பாடு கலாச்சரம் என்பவற்றில் படுதீவிரம் .இந்த கட்டிடத்தின் மூலை யன்னலில் இருந்து பார்க்கும் பொழுதே அந்த தலைநகரத்தின் பிரசித்து பெற்ற சிவப்பு விளக்கு பகுதியின் வீதியின் தொடக்க பகுதி தெரியும் . என்னதான் கதைத்தாலும் சுரேஸும் பொழுது போகாமால் அத்தெருக்களில் திரியும் சில தமிழ் பொடியளின் கரெக்டர்தான்

பனை மரத்துக்கு கீழே இருந்து பாலை குடித்தாலும் கள்ளு என்று தான் நினைப்பினம் அவன் வர விரும்பவில்லை என்று பல முறை சொன்னாலும் அவகளோடை ஒன்றும் படுக்க போக வேண்டாம் .சும்மா வந்து தெருவை ஒருக்கா வேடிக்கை பார் என்று சொல்லி சுரேஸ் ஒருக்கா கூட்டி கொண்டு போனவன். அந்த தெருவின் ஒவ்வொரு வீட்டின் முன் கண்ணாடி கூண்டுக்குள் பல தேசத்து பல மொழி பேசும் பல வயது உடைய பெண்கள் .விலையும் அப்படி இப்படி தராதரத்தை அழகை பொறுத்து போலை. .

வேடிக்கை பார்க்க கூட்டி கொண்டு போன சுரேஸு கூட ஒரு தீடிரென்று கண்ணாடி அருகில் சென்று அந்த பெண் இந்திய வம்சாவளி சூர்ணாம் பெண் போல இருந்தாள் .,சந்தையில் பேரம் பேசுவது மாதிரி பேசிக் கொண்டிருந்தான் .அவளும் அப்படியே .இத்தனை நிமிடத்தில் முடித்துவிடனும் இதுக்கு மேலை ஒரு நிமிடம்  என்றாலும் வேற கணக்கு.உனக்கு வைக்கிறதுக்கு மட்டும் தான் அதுக்கு மேலை என்னில் எதுவும் எதிர்பார்க்க கூடாது என்று ஒரு மூச்சில் சொல்லி முடித்தாள் . அவனுக்கு சுரேஸையும் அவளையும் பார்க்க எரிச்சல் எரிச்சலாக வந்தது ... உப்பிடி பேரம் பேசி பேசி போய் எந்த உணர்வு பரிமாற்றம் இல்லாமால் என்னத்தை காணுறியளோ தெரியலை.,இதிலும் பார்க்க ஏதாவது சந்து பொந்துக்குள்ளை வையுங்குவோடா சொல்லி அவனை இழுத்து கொண்டு போக முயற்சி செய்தான் ..அப்பெண் தீடிரென்று கூச்சிலிட்டு கூறினாள் ..நீங்கள் சிறிலங்கன் தானே .இஞ்சை எல்லாரும் முடிவெடுத்து இருக்கிறம் உங்களை எல்லாம் அண்டுறதில்லை எண்டு ...அண்டை கொரு நாள் அந்த மூன்றாம் கண்ணாடியில் உள்ள டச்சு காரியின்ரை மார்பை ஆழமாக உங்கடை பொடியன் ஒன்று கடித்து போட்டானாம் ..காணதாதை கண்ட மாதிரி...எங்கத்தை காண்டுமிராண்டி ஆட்களப்பா நீங்கள் என்று பட பட கூறி ஆத்திரத்தை கொட்டினாள்..

அவனை இழுத்து அந்த தெருவை விட்டு வெளியேறும் பொழுது நம்மடை பொடியள் சிலர் தோளின் தோளின் மேல் கை போட்டு சாகாவசமாக தெருவுக்குள் சென்று கொண்டிருந்தனர் .சுரேசின் மேல் இருந்த ஆத்திரத்திலும் பார்க்க நம்ம அந்த பொடியள் மேல் ஆத்திரம் மேலோங்கியது .ஏனென்றால் வந்த கொஞ்சம் நாளில் அந்த றெட் குறொஸில் வேலை செய்யிற பெட்டை அவனிலை ஒரு இது .அவனுக்கு அவளில் மேலை ஒரு சீரியசான இது இருக்கோ தெரியாது .அவர்களிடையே புத்திஜீவதமான பரிமாற்றத்தில் தொடங்கி உணர்வு உடல் ரீதியாக வரை சென்று விட்டது .அவள் தான் அந்த இனவாத டெலிகிராப் பத்திரிகையில் வந்த செய்தியை மொழி பெயர்த்து சொல்லும் பொழுது முதலில்ஆத்திரம் தான் வந்தது .தோளுடு தோள் போட்டு செல்லுவது நம்மவர்களின் சாதரணமான விசயத்தை இப்படி தங்களுடைய கண்ணோட்டத்துடன் பார்த்தது. ஒரு காட்டுமிராண்டி ஓரினசேர்க்கை கூட்டம் தலைநகரை நோக்கி வந்து இறங்கியுள்ளது என்றது தான் அந்த செய்தி.

.சிவப்பு விளக்கு போவது பற்றி விவாதித்து வரும்பொழுது எல்லாம் சுரேஸ் கேட்ட கேள்வி அவனை பார்த்து அந்த றெட் குறஸ் காரியோடு படுக்கிறியே அது என்ன மாதிரி என்று...அதுக்கும் இதுக்கும் வித்தியாசம் தெரியாமால் என்னடப்பா அந்த தமிழ் பெட்டையை லவ் பண்ணுறாய் என்று,நக்கலாய் கேட்டான் அவன்.

,அதுக்கு கலங்கிய கண்களுடன் பதில் சொல்லும் பொழுது கோபம் ஆத்திரம் எல்லாம் சேர்ந்து வார்த்தையாக வெளியில் வந்தது.அவள் வேசையை பற்றி கதையாதை ..அவள் உண்மையில் வேசையாடுறவள் தான் ..அவள் இப்ப உந்த கண்ணாடி அறையிலையும் நிக்க போறாள் என்ற கதையும் அடிபடுது ...அந்த மூதேசி என்ரை ஆளாய் கொஞ்ச காலம் இருந்தது என்றதுக்காக சொல்லவில்லை ..ஒரு தமிழ் பெட்டை நிக்கிறதை என்னாலை தாங்க முடியாமால் இருக்குது.அதோடை அனுமதிக்க இயலாது .எங்கடை கலாச்சரம் என்ன பண்பாடு என்ன ? அதனாலை இங்க இருக்கிற இயக்க பொடியளிட்டை சொல்லி இருக்கிறன் ..அவள் அப்படி கண்ணாடிக்குள் நிக்கிறதுக்குள்ளை அக்சன் எடுக்க சொல்லி ...அவன்களும் பார்ப்பம் என்று இருக்கிறான்கள்

அதெல்லாம் இருக்கட்டம் சுரேஸ்.... என்று விளித்து உனக்கு ஒரு கதை சொல்லவேணும் என்று நினைத்தனான் .இந்த இடையில் சொல்லுறன் ..உன்ரை மைத்துனன் கஸ்ட பட்ட குடும்பத்திலை இருந்து வந்தவன் என்று சொல்லி இருக்கிறாய் .அவனும் உன்னைப்போல் உப்பிடி திரிய விடாதை ..அவனது போக்கே சரியில்லை. ...எனக்கென்னவோ அவனது ஒவ்வொரு அசைவும் சந்தேகத்தை தருகுது என்று சொல்லி முடித்தான் அவன். ..ராஜா அப்படி ஆள் இல்லை அப்படி ஏதும் இருந்தால் கை காலை எடுத்து போடுவன் என்று அவனுக்கே தெரியும் என்று சுரேஸ் பதில் கூறினான்.

இவர்களை கீழை இறங்கியும் தேடியதில் தோல்வி கண்ட அவன் .இதுகளோடை இழுபடுறதிலும் பார்க்க தானே ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டு படி ஏறிக்கொண்டி  இருந்தான்.

 கொஞ்சம் முன் இறங்கும் பொழுது, இடித்து தள்ளிய கறுவல் இப்பவும் அதே இடத்தில் இருந்து புகைத்து கொண்டிருந்தான் .ஏனோ தெரியவில்லை இப்பொழுது கோபிக்கவில்லை இவனை பார்த்து சிரித்து கொண்டிருந்தான் .அவனுக்கு சிரிக்கும் மூட்டில் இல்லை ,அறையை திறந்து உள்ளே சென்றான் .சுரேஸின் மைத்துனன் ராஜாவின் கட்டிலில் தலையணையின் பின் ஒரு கட்டு பொருள் தென்பட்டது ,

இவனுக்கு இவளவும் என்னத்துக்கு என்று வாய் உளறியது ..

அவனறியாமாலே...

அப்பொழுது டெலிபோன் அடித்தது.

 மறு முனையில் ஒரு மிகவும் வயதான மூதாட்டி

ராஜாவை தேடி வந்த அவசர அழைப்புக்கு அவள் கூறிய காரணத்தினால்

தலையணை கீழ் இருந்த அவ்வளவு கட்டு கொண்டெம் ஏன் என்று விளங்கியது

ஆம் ,,கோல் கேள் மாதிரி ....ராஜா ஒரு கோல் போய்

சுரேஸ் அறிந்தால் ,,அறியத்தான் போறான் ..

.கண்ணாடி அறையில்லாத தான் வசிக்கும் இந்த இடத்தில் இருந்தும் ..என்று,,,......


(யாவும் கற்பனை)