Friday, November 18, 2011

வாடகைக் காதலி (சிறுகதை)

அவனுக்கு இன்று அரசாங்க முத்திரை இடப்பட்டு வந்த கடிதத்தை பார்த்ததிலிருந்து உப்பிடித்தான் இருக்கிறான்.வீட்டுக்கு அண்மையிலுள்ள சந்தியை இதற்க்குள் வந்து விட்டேன் என்பதை நினைக்கும் பொழுது அவனுக்கே ஆச்சரியமாயிருந்தது,.இப்ப கொஞ்ச நேரம் முன் தான் அந்த டச்சு கிழவனிடம் விடைபெற்று வந்த மாதிரி இருந்தது, அவனை அறியாமால் வருபவர்கள் போவர்களுக்கு வழி விட்டு மற்றும் திரும்ப வேண்டி இடத்தில் திரும்பி நிற்க வேண்டிய இடத்தில் நின்று  இவ்வளவு தூரத்தை நடந்து கடந்தது ஒரு நிமிடத்துக்குள் என்ற மாதிரி இருந்தது.அதற்கு காரணம் அவனுக்கு தெரியாததல்ல,, .எண்ணங்களோடு முட்டி மோதி சமாதனப்படுத்தி இருக்கும் பொழுது மறுபுறத்தில் தீடிரென்று கொழுந்து விட்டு எரியும் மனக்குமுறல்களை தணித்து ஆழ்மனத்தை அடக்குவதில் செலவழித்ததில் நிஜ கால அளவை கடந்த ஞானி போல் இருந்தான்.இப்ப கொஞ்ச முன்பு தான் தனது பாசத்துக்கு நேசத்துக்கும் நட்புக்குமுரிய அந்த கிழவனிடம் அந்த செய்தியை சொல்லி அதற்கு என்ன செய்யலாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்றல்லாம் விவாதித்து  ஏதோ முடிவை பெற்று கொண்டது போல் இருந்த இந்த மனம்.அதற்க்குள் அந்த ஒரே விசயத்தையே திரும்ப திரும்ப அரைத்து உள்ளத்தை குமுற வைத்து வாந்தி எடுத்து கொண்டிருந்ததை பார்க்க தன்னிலையே வெறுப்பு கொண்டான் .இது என்ன வாழ்க்கையடா ..சொந்த பிறந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதை பற்றி ஏன் இவ்வளவு கவலை படுவான் என்று அலுத்து கொண்டான்,

வந்த ஆத்திரம் கோபத்தில் விரக்தியில் வாசித்தததும் வாசிக்காததுமாய் இருந்த எறியப்பட்ட கடிதம் மேசையின் மூலையில் நிலத்தில் இதோ  விழப்போறன் என்ற மாதிரி ஒழங்கற்ற மாதிரி மேசையில் தொங்கி கொண்டிருந்தது,திரும்ப எடுத்து வாசித்து பார்க்க மனமின்றி இருந்தவன், அப்படி இருந்த நிலையை மாற்றி அந்த கடித்ததில் கறுத்த தடித்த எழுத்துகளில் கோடிட்ட வாசகங்களை திரும்ப திரும்ப படித்தான். இலங்கை இந்திய சமாதன ஒப்பந்தத்தின் அடிப்படையில் அங்கு அமைதி திரும்பி விட்டது, இன்னும் இரு வாரங்களில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் இல்லாவிடின் வெளியேற்ற படுவீர் ,,,வாசித்தவன் தொடர்ந்து வாசிக்காமால் நிறுத்தி விட்டு இவங்கள் பிரச்சனை முடிந்து சமாதனம் வந்து விட்டது என்று சொல்லுறாங்கள் ,சனம் இனிமேல் தான் பிரச்சனை அடிபாடு தொடங்க போகுது என்று பரவலாக கதைக்குது .,இப்படி கடிதம் கிடைத்தவன்கள் எல்லாம் அவனவன் எங்கையல்லாம் ஓடி தப்ப என்று யோசித்து கொண்டிருக்கிறான்கள் ,எங்கை ஓடி தப்பிறது.. ..இவன்கள் எடுத்த முடிவைப் போல தான் மற்ற ஜரோப்பா நாடுகள் முழுவதும் எடுக்கும் ,,ஓடுறது என்றால் எங்கை ஓடுறது ...கனடாக்காரனும் உவன் ஸ்கன்டிநேவியன் நாட்டு காரன்களும் உள்ளுக்கு விட்ட அகதிகளை ஒரு போதும் திருப்பி அனுப்பினதாய் சரித்திரம் இல்லையாம் என்று சொல்லுகினம்.....யார் கண்டாங்கள் எல்லாம் உதை... ஒரு காலத்திலை சரித்திரம் திரும்பிச்சுது என்றால்..

அந்த டச்சு கிழவன் ,,கிழவன் என்று தான் அவனை அன்போடு கூப்பிடுவான் .கிழவன் என்று சொல்லுமளவுக்கு அவனுக்கு அவ்வளவு வயதில்லை சரியாக,வாழ்க்கையை அனுபவிக்க தொடங்கும் வயதான நாற்பது அப்படித்தான் இருக்கும் ,,உண்மையாய் வாழ்க்கையை ரசித்து கொண்டாடி குதூகலித்து இந்த வயதிலும் இருக்கும் அவனைப் பார்க்க ..ஒரு வித பொறாமை கலந்த ஆச்சரியம் தான் ,,அவன் அனார்கிசிஸ்டாம் என்று முதல் சொல்லும் பொழுது அது என்ன என்று புரியவில்லை ,...எப்படி முதலில் அவனுக்கு பழக்கம் ஏற்பட்டது என்று சுவையான சம்பவம் .அதிலும் பார்க்க சுவையான விடயம் வாரக் கடைசியில் ஒரு காதலியை சந்திக்கும் ஏக்கத்துடன் இருப்பது மாதிரி இருந்து சந்தித்து மது அருந்தி விவாதித்து அவர்கள் தங்களுக்குள் கொண்டாடுவது.

.ஒரு பெட்டை பிடியன் ,வரண்டு பாலைவனமாக இருக்கும் உன் மனதை குளிர்மையாக்கி பசும் சோலை மாதிரி வைத்திருக்கும் உன் உடலுக்கும் நல்லது என்று அடிக்கடி அந்த கிழவன் அவனுக்கு ஆலோசனை சொல்லுவான்.அது மட்டுமன்றி அப்படியான சூழ்நிலைகளை உருவாக்குவதற்க்காக தனது தெரிந்த வளங்கள் வழிமுறைகள் அனைத்தையும் அவனுக்காக பயன் படுத்தினான் ,அவனது முயற்சி ஒரு பொம்மைக்கு உயிர் வர வைக்கும் முயற்சியாகத்தான் இருந்தது .கிழவன் இவனை ஒரு சங்கோஜ பிரஜையோ ,,என்று நினைத்தாலும் ,அது உண்மை இல்லை ..ஏதோ படி தாண்டா பதிரனாக சின்ன வயதிலிருந்து பழக்க படுத்திய காரணமோ அல்லது பவுத்திரமாக தமிழில் செய்த பெட்டையை  பெற்றோர் ..மூலம் இறக்குமதி செய்யும் நோக்கத்தில் இருப்பது தான் காரணமோ தெரியாது.

ச்சாய்... கிழவன் சொன்னமாதிரி ஒரு டச்சு பெட்டையை பிடித்து இருந்தால் .இந்த சமயத்தில் மற்றவன்கள் செய்யிற மாதிரி கலியாணம் செய்ய போறன் என்று காட்டி விசா எடுத்திருக்கலாம் ,,என்ன உவகளோடை  தொடர்ந்து வாழப்போறமே அல்லது அவகள் தான் எங்களோடை வாழுவுகளோ,,ஒரு கொஞ்ச வருசத்துக்கு பிறகு ,ஒன்று நாங்கள் துரத்துவம் அல்லது அவகள் விட்டு போவாகள் ,நிச்சயமாக தொடர்ந்து இருக்கும் திருமணம் இல்லாவிட்டாலும் ,ஆனால் விசா மட்டும் நிச்சயமெல்லோ ,,,என்று நினைத்து சந்தர்ப்பங்களை தொலைத்ததை தேடி கொண்டிருந்தான்.


டெலிபோன் மணி அடித்தது,,மீண்டும் அவன் மைத்துனர் தான் சொர்க்கத்துக்கு   போகும் பாதையும் வழிமுறைகளும் ஆலோசனை சொல்லி கொண்டிருக்கிறார் ,,அதை விட சொர்க்கத்தில் இருந்து இன்றைக்கு மட்டும் நாலு தரம் அடித்து போட்டார் ,மைத்துனருக்கும் தான் இருக்கும் நாடு அப்படி என்ற நினைப்பு வேற,அவனை பொறுத்தவரையில் அவன் இருக்கும் நிலமையில் இந்த நாட்டை விட்டு ஏதாவது நாடு ஒன்று ஏற்கும் என்றால் அது சொர்க்கமே .சனம் சொர்க்கத்தின் நுழைவாயிலை அடைந்து விட்டால் காணும் என்ற நிலையில் தங்களுக்கு தெரிந்த சகல வழிமுறைகளை யாவற்றையும் பயன் படுத்தி கொண்டு முயற்சி செய்யுதுகள் சிலதுகளுக்கு  வெற்றி சிலதுகளுக்கு தோல்வி


உந்த  அம்ஸ்ரடாமாலை வாறதை விடு ...எல்லாம் ஏயாப்போட்டும்  எங்கட கள்ள முறையளும் அடிப்பட்டு போச்சாம் ,,உங்கட பிறவுண் தோலை கண்டால் காணுமாம் உதுக்காலை விடுறான்கள் இல்லையாம் ,,,மைத்துனர் மட்டும் கனடா போனாப்போலை வெள்ளையாய் போனார் என்று நினைத்தாரோ தெரியாது ,,ஏதோ புது டெக்னீக்களை பார்த்து செய்து இங்காலே கெதியாய் வரப்பார் என்று சொல்லி டெலிபோனை வைத்துப்போட்டார்

, சூர்னாம்காரின் டச்சு பாஸ்போட்டிலை தன்ரை தலையை மாத்தி எல்லாம் றெடியாக்கி வைச்சு இருக்கக்கை இந்த ஆள் இப்படி பயப்படுத்துது...என்று நினைத்தவன் ,,ராஜன் தான் தனக்கு ஒன்று ஒழுங்கு படுத்தக்கை அவனுக்கு ஒன்று ஒழுங்கு படுத்தனவன் .அதோடை ராஜனின் மாத்தின பாஸ்போர்ட்டை பார்க்க்ககை கீளீனா மாத்தின மாதிரி இருக்கு ,,தனக்கு மாத்தின பாஸ்போர்ட்  கொஞ்சம் கீளினாக மாத்தவில்லை என்று அவனுக்கே பட இப்பவே ஏர்போர்ட்டில் பிடிபட்டமாதிரியான உணர்வு மேலோங்கியது

அவனிலும் விட கிழவன் தான் என்ன செய்யலாம் என்று மூளையை கசக்கி  பிழிந்து எதாவாது வருகுதா என்று அசையாமால் \யோசித்து கொண்டிருந்தான் ,தீடிரென்று புதிய கண்டுபிடிப்பை கண்டு பிடித்தவன் போல் துள்ளி குதித்தான் ..மகிழ்ந்தான் ,,என்றாலும் இது நடைமுறைக்கு சாத்தியமா ,அவன் சம்மதிப்பானா என்ற அச்சம் புருவத்தில் ஓடி மறைந்தது.

இது தான் திட்டம் ,,,டச்சு பெட்டையோடை ஜோடியாக போறது,,,,என்று சொல்லிவிட்டு தொடர்ந்து சொன்னான், எனக்கு தெரிந்த பெட்டை இருக்கிறாள் அவள் உந்த நாடுகளுக்கு எல்லாம் போறவள் ,,வாறவள்..என்ன அவளுக்கு கனடா போறதுக்கு நீ டிக்கட் போட்டியெண்டால் ,,அவள்  உனக்கு ஜோடியாக நடிக்க தயாராவாள்

திட்டம் வரைந்து பேசி கொண்டிருந்தவனை இடைமறித்த அவன்  ,,விளையாடுறீயா ,,எனக்கே டிக்கட் போடுறதுக்கு எங்கெல்லாம் தெண்டி அல்லாடுகிறேன் ,,,,அவளுக்கும் டிக்கட் என்றால் ....நான் எங்கு போறது,,,என்று சொல்லும் பொழுது குரலில் ஒரு பரிதாபமும் கையறந்த நிலையும் கலந்திருந்தது

கிழவனின் சேமிப்பு அவளின் டிக்கட்டாக மாறியது

என்னதான் திட்டத்தை வரைந்தாலும் சிறிலங்காகாரன் சூர்னாம் நாட்டுக்காரன் மாதிரி இருந்தாலும் ,,,எங்கேயோ இவர்களிடம் இருக்கும் அப்பாவித்தனமான தோற்றமோ வெகுளித்தனமோ அவன்களிடமிருந்து வித்தியாச படுத்தி காட்டுகிறது ..அதனால் ,,அதுவும் இவனை பார்த்தாலே தெரிகிறது .என்ன செய்யலாம் என்று கிழவன் மேலும் யோசித்தான்

நாலு ஜந்து மணித்தியாலங்களில் பாரிஸ் விமான நிலையத்தில் இருந்து பயணம்

அம்ஸ்டாமிலிருந்து பெல்ஜியத்துக்கூடாக பாரிஸ் செல்லும் பஸ் இல் இந்த ஜோடிகள் ...அவள் அவனது கை குலுக்கும் பொழுது உள்ளங்கையை சுரண்டிய பொழுதே அவள் இந்த ஜோடி நடிப்புக்கு தயராகி விட்டாள்,,இவன் பதட்டபட்டது தயாரகவில்லை என்றதையும் காட்டியது

போரில் இந்த அஸ்திரத்தை ஒரு முறை தான் பாவிக்கலாம் அதற்கு மேல் பாவிக்க கூடாது என்று குந்திதேவி சத்தியம் வாங்கியது போல் ,,,கிழவனும் இவனிடம் சத்தியம் வாங்கி கொடுத்திருந்தான்.ஒரு முறை தான் பாவிக்கவேணும் .என்று..மூன்று மாத்திரைகள் , அந்த நேரத்தில் பதட்ட படாமால் இருக்க வேணும் என்பதற்க்காக,,,அது ஹாலந்தை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட சிறிது போதை வஸ்து கலந்த மாத்திரை மருத்துவ தேவைகளுக்காக பாவிப்பக்கபடுவது

பஸ் மெல்லிய ஒளியில் தூங்கி வழியும் பிரியாணிகளுடன் பெல்ஜியத்தினூடாக ஓடிக் கொண்டிருந்தது ,அவனும் அவளும் பக்கத்தில் இருந்தாலும் ஜோடியாக தெரிய மறுத்தது ..கிழவன் கொடுத்த மாத்திரை அவனுள் சென்றது ,,அவனுக்கு அவளின் மனது நெருங்கி வருவது போல் இருந்தது அவன் பேசினான் அவளும் பேசினாள் ...அவள் தனது காதலன் கனடாவில் படிக்கிறான் என்றாள் ,,,அவனுக்கு இப்பொழுது மிதப்பது போன்ற  மனத்தடை எதுவும் இல்லாத உணர்வு ...எனது காதலி நீ தான் இப்ப என்றான் ...ஏதோ நகைச்சுவையை கேட்ட மாதிரி சிரித்தாள்.  அவன் தூங்க இடமும் தலையணையும் தேடினான் . அவள் அவளது தோள்பட்டையை காட்டினாள் ..அவனோ அவளினுள் துவண்டான் ..அவளும் நெளிந்தாள்...ஏனோ அவளும் அதை அனுமதித்தது மாதிரி இருந்தது ,,அவன் அவளின் அதரத்தை மலர வைக்கும் முயற்சில் முயன்றான்

அவளோ நாகரிகமாக தடுத்து கூறினாள் ...எனது காதலனை தவிர உதட்டில் முத்தம் கொடுப்பதில்லை என

அவன் என்ன கணக்கு இது என்று சிரித்தான் ,,,அவளும் சிரித்தாள் அது என்ன கணக்கு என்று விளங்கவில்லை

ஜோடியாக அழகாக நடித்து அந்த விமான நிலையத்தில் உள்ள பாஸ்போர்ட் செக் பண்ணும் இடத்தை கடந்து விட்டார்கள்...இருவரும் அங்குள்ள கோப்பி கடை ஒன்றில் ,,,ஒலிபரப்பு அலறுகிறது,,,இவனது சூர்னாம் பாஸ்போர்ட்டு பெயரை சொல்லி வரும்படி ,,இவனுக்கு அவனின் பெயர் தானே ஞாபகத்தில் இருக்கும் ...அவர்கள் நேரடியாகவே வந்து விட்டார்கள் ..விசாரணை தொடங்கியது ..டச்சு எழுத வைத்து பார்த்தார்கள் கதைக்க வைத்து பார்த்தார்கள் .

..அத் தருணத்தில் அவர்களை நம்ப வைக்கும் நோக்கில் அவள் அவனை அடிக்கடி இறுக்க கட்டி அணைப்பதுமாயும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடுவதுமாயும் இருந்தாள் ..

.. விமானம் புறப்படும் நேரம் கடந்து விட்டது ..விமான பணிப்பெண்கள்
காத்திருந்தார்கள் இவர்களை கூட்டி செல்ல ,,சந்தேகம் தீர்ந்து அதிகாரிகள் அவனை அனுமதித்து வெளிக்கிடும் பொழுது ,,

,அதே நேரம் அங்கு,உள்ளுக்கு பிடிப்பட்டிருந்த ராஜன் சத்தம் போட்டான் ,,,,உவனும் சிறிலங்காகாரன் என

அவள் கனடா சென்றாள்

அவனும் ராஜனும் ........


(யாவும் கற்பனை)
5 comments:

மைந்தன் சிவா said...

அருமையான சிறுகதை!!

Online Works For All said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

மிது said...

வணக்கம் மைந்தன் சிவா ,,சிறுகதையை வாசித்து கருத்துரை இட்டதுக்கு மிக்க நன்றிகள்

சனாதனன் said...

nice frend:)

மிது said...

வணக்கம் சனாதனன் வருகைக்கும் கருத்து கூறியதுக்கும் மிக்க நன்றிகள்

Post a Comment